Posts

Showing posts from December, 2017

இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்

இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். 1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். இந்த அமைப்பின் முதல் தலைவர் ஜவகர்லால் நேரு ஆவார். முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951-ல் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாகிஸ்தானின் போரால் 1965ல் தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வரட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969ல் தொடங்கப்பட்டது. 1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990-ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92

பாரதியார்

எம் கவிஞன்  பாரதியாருக்கு சமர்ப்பணம் ... கதிரவனின் கைப்பட்டால் மலருக்கு வாழ்வு_உன் கவிதையின் சொல்பட்டால் மனிதனுக்கு எங்கு தாழ்வு! பாரதி நீ எங்கள் தமிழின் தங்கம் ! அதை சொல்வதினால் பெரும் இன்பம்! உன் கையில் இருந்து சிதறிய முத்துக்களால் ஜொலிக்கிறது எங்களின் முகம்.... தனிமையிலும் தாலாட்டுப் பாடி உறங்க வைக்கும் உனது படைப்புகள் ..... நரைமுடி படர்ந்தாலும்-உன் கவிமுடி படராது! கைப்பேசி காதல் பேசும் காலத்திலும் உன் கவிதைகளும் பேசும் காதல்! நீ காண நினைத்த புதுமை பெண்கள் சிறையிலிருந்து மீண்டு எழுந்து சிறகுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.... அடிமை சூத்திரத்தில் அகப்பட்டிருந்த நாங்கள்- இன்று உன் கவிமை சுதந்திரத்தனால் புறப்பட்டுருக்கிறோம்! எட்டயப் புறத்தில் பிறந்ததினால் என்னவோ- இன்று யாரும் எட்டாத தூரத்தில் நிற்கிறாய்! விடுகதையாய் திகழ்ந்த எங்களின் வாழ்வு இன்று உன்னால் விடுதலையாய் மாறிவிட்டது..... உன் பரணி உள்ள வரைக்கும் எங்களின் தரணி என்றும் வாழும்! By K.Monisha BA...B.Ed....,

Miss you friends

Image
The strength and intensity of a friendship often has nothing to do with how often you see each other. If you connect on that level, that’s it— you’re there whether you see each other all the time or not.

Happy New Year

Image

Ramanujan

கணித மேதை ராமானுஜன் கணித மேதை ராமானுஜன் (1887-1920) சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன. 1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது.  அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்