பாரதியார்

எம் கவிஞன்  பாரதியாருக்கு
சமர்ப்பணம் ...

கதிரவனின் கைப்பட்டால் மலருக்கு வாழ்வு_உன்
கவிதையின் சொல்பட்டால் மனிதனுக்கு எங்கு தாழ்வு!

பாரதி நீ எங்கள் தமிழின் தங்கம் !
அதை சொல்வதினால் பெரும் இன்பம்!

உன் கையில் இருந்து
சிதறிய முத்துக்களால்
ஜொலிக்கிறது எங்களின் முகம்....

தனிமையிலும் தாலாட்டுப் பாடி
உறங்க வைக்கும்
உனது படைப்புகள் .....

நரைமுடி படர்ந்தாலும்-உன்
கவிமுடி படராது!

கைப்பேசி காதல் பேசும் காலத்திலும்
உன் கவிதைகளும் பேசும் காதல்!

நீ காண நினைத்த
புதுமை பெண்கள்
சிறையிலிருந்து மீண்டு எழுந்து
சிறகுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்....

அடிமை சூத்திரத்தில்
அகப்பட்டிருந்த நாங்கள்- இன்று
உன் கவிமை சுதந்திரத்தனால்
புறப்பட்டுருக்கிறோம்!

எட்டயப் புறத்தில் பிறந்ததினால் என்னவோ- இன்று
யாரும் எட்டாத தூரத்தில் நிற்கிறாய்!

விடுகதையாய் திகழ்ந்த எங்களின் வாழ்வு
இன்று உன்னால்
விடுதலையாய் மாறிவிட்டது.....

உன் பரணி உள்ள வரைக்கும்
எங்களின் தரணி என்றும் வாழும்!

By

K.Monisha BA...B.Ed....,

Comments

Popular posts from this blog

Drama competition 2019

சதுரங்கப் போட்டி